அரியலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறு., தமிழக அரசு தடை கூறவில்லை.! Dr. அன்புமணி கேட்ட கேள்வியால் அதிரும் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 10 கிணறுகள் தோண்டுவதற்கு தடைக்கோரி தமிழ்நாடு அரசு மனு அளித்துள்ளதா? என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு மத்திய அரசு தரப்பில், 'ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்ட அனுமதி வேண்டும் என்றோ., அனுமதி கொடுக்க கூடாது என்றோ தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த கடிதமும் பெறவில்லை' என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

முன்னதாக, நேற்று கூடங்குளம் அணுக்கழிவுகளை  பாதுகாத்து வைக்க வேறு இடம் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்று, இன்று மாநிலங்களவையில் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., அவர்கள் எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார்.

கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவுகள், அந்த வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்றும், அவற்றை சேமித்து வைப்பதற்காக மாற்று இடம்  எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Question about Ariyalur Hydrocarbon


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->