என்எல்சியே வெளியேறு | அன்புமணி இராமதாஸ் இரண்டாவது நாள் நடைபயணம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை விட்டு என்எல்சி நிர்வாகம் வெளியேற வேண்டும் என்ற முழக்கத்துடன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., இரண்டு நாள் நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று வடலூர் அடுத்த வானதிராயபுரம் கிராம பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து தென்குத்து, வடலூர், மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிளிக்கும் வழியாக ஆதண்டார்கொல்லை பகுதிவரை, அன்புமணி ராமதாஸ் நடை பயணம் மேற்கொண்டார்.

மேலும் இந்த நடைபயணத்தின் போது மக்களை சந்தித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். என்எல்சி நிர்வாகம் ஆசை காட்டி மோசம் செய்து வருவதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

ஆளுங்கட்சியினர், சில அரசியல் கட்சியினர் உங்களின் மனதை மாற்றி, உங்கள் நிலத்தை பறிக்க திட்டமிடுவார்கள். அந்த சூழ்ச்சிகள் சிக்கிவிட வேண்டாம் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தனது நடைப்பயணத்தை மேல்வளையமாதேவி கிராமத்திலிருந்து தொடங்கினார்.

சுமார் 12 30 மணிக்கு நடைப்பயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ், கீழ்வளையமாதேவி, கரிவெட்டி கிராமங்கள் வழியாக சென்று மும்முடிச்சோழகன் கிராமத்தில் நிறைவு செய்கிறார்.

இன்றைய நடைபாதத்தின் போதும் பொதுமக்களும், பாமகவினரும் திரளாக கலந்து கொண்டு, என்.எல்.சி நிர்வாகத்தை வெளியேற வலியுறுத்தி கோஷங்களை  எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumanai Ramadoss against NLC campaign


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->