உலக அரங்கில் அதிரவைக்கும் பேச்சால் அசத்திய தமிழன் - சத்தமில்லாமல் அன்புமணி சாதித்தது..? அரசியலின் அடுத்த சகாப்தம்.! - Seithipunal
Seithipunal


திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள்தான் மாற்று என்று பாமக அடுத்தடுத்து மக்கள் நலதிட்டங்களை கையில் வைத்துக்கொண்டு தேர்தலை சந்திக் தயாராகி வரும் சூழ்நிலையில், அக்கட்சியின் ஆதார நம்பிக்கை அன்புமணிதான்.

இதன் விளைவாக தான்  ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்னும் முழக்கத்தை கடந்த சட்டபேரவை தேர்தலில் காண முடிந்தது.

மேடைப் பேச்சுக்கள், கருத்தரங்குகள் தொடங்கி ஃபேஸ்புக் பக்கம் வரை பல தளங்களில் தொடர்ந்து இயங்குகிறார். அன்புமணியின் அரசியல் மூலம் அடுத்த தலைமுறை அரசியலைத் தொடங்கியிருக்கிறது பாமக.

2004 - 2009 வரை மத்திய சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச் சட்டம்; திரைப்படங்களில் புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்தது; புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடச் செய்தது; குட்காவுக்குத் தடை, போலியோ ஒழிப்புக்கான திட்டங்கள், எச்.ஐ.வி. - எய்ட்ஸ் நோயின் தாக்கம் 50% குறைகிற அளவுக்கான நடவடிக்கைகள் என்று கவனிக்கத்தக்க பணிகளைச் செய்தார். இக்காலகட்டத்திலேயே ‘தேசிய ஊரகச் சுகாதார இயக்கம்’, ‘108 ஆம்புலன்ஸ் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டன.

சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ மையம், தேசிய பள்ளிக் குழந்தைகளுக்கான மருத்துவத் திட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்ததில் அன்புமணிக்கு முக்கியப் பங்கு உண்டு.

இப்பணிகள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் அவருக்கு முதல் இடத்தைப் பெற்றுத் தந்தன.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக இருந்தபோது, 2000-ல் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாடு, 2002-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு, 2003-ல் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாடு, 2012-ல் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி மாநாடு என்று பல முக்கிய மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.

2013-ல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்று, இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார்.

சமீபத்தில் இலண்டன் தமிழ் சங்கம் நடத்திய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உரையாற்றினார்.

அன்புமணி தற்போது சுகாதரா மந்திரியாக இல்லாவிட்டாலும் கடந்த காலங்களில் சுகாதரத்துறையில் உலக சாதனை படைத்தமைக்காக இன்றளவும் உலக நாடுகள் சுகாதரத்துறையை எப்படி மேம்படுத்துவது என்ற யோசனையை கேட்டு அறிந்துகொள்கின்றனர்.

பல விஷயங்களில் அன்புமணியிடமும், பாமகவிடமும் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. வார்த்தைகளிலுள்ள மாற்றம் செயல்பாடுகளிலும் தொடரும்போது அன்புமணி தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor anbumani speech in london business meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->