தமிழக போலீசார் மீது விசிக, திமுகவினர் நடத்திய கொடூர கொலைவெறி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


இன்று குடியரசு தினத்தன்று டெல்லியில் பிராமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். டெல்லி ராஜபாதையில் நடக்க உள்ள பிராமாண்ட அணிவகுப்புக்கு போட்டியாக விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர். இதில், மொத்தம் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியில் சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும். இந்த டிராக்டர் பேரணி 24 மணிநேரம் முதல்  72 மணிநேரம் வரை பேரணி நீடிக்க வாய்ப்பு உள்ளது.

ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து இந்த பேரணி தொடங்கியுள்ளது. கன்ஜாவாலா, பவானா, அவுசான்டி எல்லை, கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை சென்றடையும். இதேபோல், டெல்லி- உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கியுள்ள பேரணி குன்ட்லி, காஜியாபாத், பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை சென்றடைய உள்ளது.

இதற்கிடையே, டெல்லி நகருக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை ஏவி துரத்தி அடிக்க தொடங்கியுள்ளனர். மேலும் போலீசார் ஒரு சில பகுதிகளில் அடிக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குமுன் விவசாயிகள் உள்ளே நுழையந்ததால் போலீசால் இந்த செயலை செய்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து  டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் டிராக்டர்களில் போலீசார் தடுப்புகளை மீறி போலீசார் மீது டிராக்டரை விட்டு ஏற்றும் வகையில் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் போலீசார் திமுகவினர் மீதோ அல்லது அப்பாவி விவசாயிகள் மீதோ பதில் தாக்குதல் எதுவும் நடத்தாமல் அவர்களை திருப்பி அனுப்ப முயற்சித்தனர்.

இதேபோல், திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் போலீசார் மீது தாக்குதல் நடத்துவது போல் இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் மீது ஏற்றிச் செல்லும் வகையிலும் அத்து மீறலில் ஈடுபட்டனர்.

மேலும், தஞ்சாவூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சியினர் அராஜகமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் இந்த போராட்டம் விவசாயிகளுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk worst protest in thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->