திமுக பெண் நிர்வாகி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சி.! கோவையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், திமுக தலைவர் மு க ஸ்டாலினை விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் சித்ரகலா என்பவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதில், "ஊரடங்கு காலத்தில் அயராது உழைத்தவரா? என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி படத்தையும், ஊரடங்கு காலத்தில் விக் (ஒட்டு முடி) வைத்தவரா?"  என கேள்வி எழுப்பி, திமுக தலைவர் ஸ்டாலின் படத்தையும் போட்டு கிண்டல் செய்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இன்னொரு சுவரொட்டியில், "விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? இல்லை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்ட வரா?" என்று விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த சுவரொட்டிகளில், இந்த சுவரொட்டி அடித்த அச்சகத்தின் பெயரோ அல்லது யார் ஓட்டினார் என்ற விவரம் எதுவும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் இந்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர்.

இந்த நிலையில், இந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் சித்ரகலா என்பவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு, தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயலவே, அங்கிருந்த போலீசார், அவரை தற்கொலை செய்துகொள்ளாமல் தடுத்து காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK WOMEN attempt suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->