திமுக பிரமுகர்.. இந்தி எதிர்ப்பு தீக்குளிப்பு.. ₹.1 லட்சம் நிதியுதவி அளித்த திமுக.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவருக்கு வயது 85. இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பதவி வகித்துள்ளார்.

இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி மற்றும் இரத்தினவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர். திமுக மீது தீவிர பற்று கொண்ட இவர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் திமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை தனது உடல் மீது ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் தற்போது திமுக சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியை தொழில்துறை அமைச்சர் கணேசன் வழங்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK volunteers fired himself And DMK give 1 lakh For Death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->