#BREAKING: பொது தொகுதியில் போட்டியிடும் விசிக.! திமுகவுடன் சற்றுமுன் தொகுதி பங்கீடு உறுதியானது.!  - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தை கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் விடுதலை சிறுத்தை கட்சி 15 தொகுதிகளை கேட்டுள்ளது. அதில் 5 பொது தொகுதிகளும் அடங்கும்.

ஆனால், விசிகவுக்கு 5 தொகுதிகள் வரை திமுக ஒதுக்க முன்வந்துள்ளது. அதிலும் பொதுத் தொகுதிகளை ஒதுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 

இன்று காலை முதல் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலாக 10 தொகுதிகளுக்கு குறைந்தால் நாம் தனித்தே போட்டி இடலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் இந்த 10 தொகுதிகளில் 3 பொதுத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில்,, சற்றுமுன் திமுக -விசிக இடையே தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்பட்டு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியான அந்த தகவலின் படி, திமுக கூட்டணியில் விசிகாவுக்கு 6 தொகுதிகள் இறுதியாகியுள்ளது.

 

இந்த 6 தொகுதிகளில் இரண்டு பொதுத் தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 4 தனித் தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இன்னும் சற்று நேரத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VCK ALLIANCE FINAL INFO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->