உள்ளாட்சி தேர்தல் தடை கேட்டு திமுக மனு! உச்சநீதிமன்றம் கொடுத்த ஒப்புதல்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் ஆனது திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக, 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. 

தீர்ப்பளித்த நிலையில் முந்தைய தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, மீண்டும் புதிய அறிவிப்பானது நேற்று முன்தினம் தமிழக தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள சாராம்சம் படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை என திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளைக்கு இந்த மனுவை விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்ட நிலையில் நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK to file a fresh plea against local body polls


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->