#BigBreaking | திமுகவின் முக்கிய புள்ளி., மூத்த தலைவர் அதிமுகவில் இணைய போகிறாரா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி, குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதற்க்கு அமைச்சர் முத்துசாமி தான் காரணம் என்று, சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் சமூகவலைதளங்களில் காணொளி வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த சர்ச்சை காரணமாக திமுகவின் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும், எனவே திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி விலக முடிவு எடுத்திருப்பதாகவும் திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்குமுன், திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்த அறிக்கையில், "2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றவதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று. அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் விலகி இருக்கிறேன்" என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிமுகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. அவரின் அரசியல் ஆரம்பகால வாழ்க்கை என்பது அதிமுகவிலையே இருந்த காரணத்தினால், அவர் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவில் இணையப் போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரித்துள்ளார். மேலும், 40 ஆண்டு காலம் திமுகவில் இருந்து உள்ளேன் நிச்சயம் அதிமுகவில் சேர மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk suppulakshmi some info


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->