முட்ட முட்ட முழிக்கும் திமுக எம்.பி., செந்திகுமார்.! திருட்டுத்தனத்தை கிழித்து எடுக்கும் தனி ஒருவன்.!  தரமான சம்பவம் குமாரு.! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் சரவணன் நடராஜன் என்பவர், திமுக எம்.பி.,களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக திமுக எம்.பி செந்தில் குமாரை தொடர்ந்து தனது கேள்விகளால் திணற செய்து  வருகிறார். சரவணன் நடராஜன் பதிவுகளில் தெரிவித்து இருப்பதாவது, 

"திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமார் தான் உள்ளிட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் NIA க்கு ஆதரவாக வாக்களித்ததற்கு காரணங்களாகச் சொன்ன பொய்கள் ஆதாரங்களுடன்... 

1. திடீரென கொண்டு வரப்பட்ட மசோதா
2. போதிய நேரமின்மையால் உறுப்பினர்களுடன் கலந்து பேச முடியவில்லை 
3 தலைவருடன் பேச நேரமில்லை 
4. அவசரத்தில் புரிதலில்லாமல் எடுத்த முடிவு 
5. காங்கிரசோடு கூட்டணி என்பதாலும், முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டமென்பதாலும் காங்கிரஸ் எடுத்த முடிவோடு போக வேண்டிய நிலை திரு செந்தில்குமார் கூறிய மேற்கண்ட ஐந்தும் பொய்யென நிரூபிக்கும் ஆதாரங்கள்: 

(பாராளுமன்ற ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்கள் இணைப்புகளுடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன) 

பாராளுமன்ற மக்களவையில் NIA மசோதா அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 08-07-2019 
NIA மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தேதி: 15-07-2019 

வாக்கெடுப்பிற்கு முன் திரு.ஆ.ராசா 5 பக்க அளவிற்கு மசோதா மீது உரை (அவசரத்தில் மசோதா தாக்கலாயிருப்பின் 5 பக்க உரை சாத்தியமானது எப்படி?) 

மக்களவையில் மசோதா தாக்கலுக்கும், வாக்கெடுப்பிற்கும் இடையில் 8 நாட்கள் கால அவகாசம் இருந்திருக்கிறது! 

வாக்கெடுப்பில் திமுக NIA மசோதாவுக்கு ஆதரவு ! 

தமிழகத்தைச் சார்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இருவர் NIA மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்! 

தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் NIA மசோதா மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை! 

பாராளுமன்ற மாநிலங்களவையில், NIA மசோதா அறிமுகம் செய்யப்பட்ட தேதி: 15-07-2019 
NIA மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தேதி: 17-07-2019 
திரு ,திருச்சி சிவா 2 பக்க அளவிற்கு மசோதா மீது உரை

திமுக Division வாக்கெடுப்பு கோராததால் குரல் வாக்கெடுப்பில் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது!

நாள் 10, நேரம் காலை 10மணி:
CAAவ ஏன் எதிர்த்து வாக்களிக்கல? வாக்களிச்சதா ஏன் பொய்களா சொல்றீங்க? இத கேட்ட என்ன எதுக்கு 'முட்டாள்'னு சொன்னீங்க? NIAக்கு ஓட்டு போட்டதுக்கு காரணங்களா எதுக்கு பொய்களா சொல்றீங்க? இது எல்லாத்துக்கும் மக்கள்ட்ட எப்ப மன்னிப்பு கேக்க போறீங்க?

CAA மசோதா மீது திமுக பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் (Amendments), வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களித்தது தொடர்பான ஆவணங்களை கேட்டு மக்களவை செயலாளரிடம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்யப்பட்டுள்ளது! (பாராளுமன்ற அவைக்குறிப்புகளை திமுக நம்ப மறுப்பதால்)" என்று தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

மேலும், திமுக எம்.பி., தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், அதனை திருத்திக்கொள்ள சொல்லிய தன்னை முட்டாள் என்று அவமதித்து விட்டதாகவும், மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் சரவணன் நடராஜன்.

இப்போது அனைவரது கேள்வியும் ஒன்றே CAA சட்டத்துக்கு எதிராக திமுக எம்.பி.,க்கள் வாக்களித்த ஆதாரம் எங்கே? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK support caa and nia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->