தேர்தல் பரபரப்புக்கு தயாரான திமுக.. துவங்கிய இணைய விளம்பரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கவும், பிடிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசியலில் தேர்தலுக்கான பரபரப்பு தற்போது இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. 

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பரபரப்பு சற்று குறைவாக இருந்தாலும், தளர்வுகள் அமலானதில் இருந்து தேர்தலுக்கான பரபரப்பு மக்களிடையே தெரிய துவங்கியது. இந்நிலையில், இந்த தேர்தலிலாவது திமுக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. 

இதற்காக கார்ப்பரேட் சக்திகளை எதிர்த்து வரும் திமுக, மறைமுகமாக கார்ப்பரேட் அமைப்புடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி திமுகவின் செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், மக்கள் அதிகளவு பயன்படுத்தும் இணையத்தளத்தில் தொடர் விளம்பரங்கள் இப்போதிலிருந்தே ஒளிபரப்ப துவங்கியுள்ளது. 

ஏற்கனவே அரசின் மீது சம்பந்தமே இல்லாமல் அடுக்கடுக்கான குறைகளை கூறி வரும் திமுக, இணைய விளம்பரங்களிலும் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற பல செயல்களை செய்து வரும் நிலையில், இணையம் மூலமாக திமுகவில் இணையும் வகையில் தனியாக தளமொன்று துவங்கப்பட்டது. 

இந்த தளம் துவங்கப்பட்டதில் இருந்து 72 மணிநேரத்திற்குள் சுமார் 1 இலட்சம் நபர்கள் திமுகவில் இணைந்துள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இதனை கேட்ட நெட்டிசன்கள் சந்தானம் காமெடி போல, அது எப்படி திமிங்கலம் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Start Online Promotion Assembly Election 2021 Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->