ரகசியம் கசிந்தது எப்படி? சில மணி நேரங்களில் காப்பி அடித்த ஸ்டாலின்! ஸ்லீப்பர் செல்லால் தகிக்கும் கோட்டை வட்டாராம்!  - Seithipunal
Seithipunal


கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது போன்று, மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டம் என இன்று காலை செய்திகள் வெளியானது.  

மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கோட்டை பகுதியில் பேச்சு நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகியது. 

இந்த நிலையில் இந்த செய்தியை அறிந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிகுழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என பொள்ளாச்சியில் அறிவித்து இருக்கிறார். மேலும் இந்த வாக்குறுதியையும் முதலமைச்சர் பழனிசாமி நாளை நிறைவேற்றி விடுவார் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

முன்னதாக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தபோது, அதை திமுக சொல்லி தான் அதிமுக அரசு செய்ததாக, திமுக தலைவர் ஸ்டாலின் கூறி பெருமை தேடிக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி 29-ம் தேதி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி வந்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஜனவரி 15 ஆம் தேதி புயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை தற்போது ஸ்டாலின் அறிவித்திருக்கிறார. மேலும் அதனை அதிமுக அரசு செய்து, தாங்களே செய்வதாக சொல்வார்கள் எனவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்த தகவல்கள் வெளியில் கசிவது எப்படி, என்ற விசாரணையை அதிமுக வட்டாரத்தில் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Stalin speak about women loan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->