முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்வதன் ரகசியம் என்ன தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வது தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கா அல்லது அவருக்கான முதலீடுகளை திரட்டவா?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழகத்தின் 95வது வட்ட கிளையின் செயலாளர், - ஐ.சி.எஃப் - தொழிற்சங்கத்தை சார்ந்த திரு.அகிலன் அவர்களின் சகோதரர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய விவரம் பின்வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்களுக்குப் பணியாற்றும் சூழ்நிலையில் இருந்து என்றைக்கும் பின்வாங்கியது இல்லை. தொடர்ந்து நாம் அதை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றோம். மக்களுக்காக ஆற்றுகிற பணி மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், இயக்கத்தைத் தாண்டி, மக்களையும் தாண்டி இந்த நாட்டையும் பாதுகாக்கின்ற பணியிலே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகளே உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.

தயாநிதி, தயாநிதி மாறன்,

தம்பி தயாநிதி மாறன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார். 1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய நாட்டில் இருக்கும் பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்கள். சுதந்திரத்திற்குப் போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் கொடுமைப்படுத்தப்படுகின்றார். வாஜ்பாய் கைது செய்யப்படுகின்றார். அத்வாணி சிறையில் அடைக்கப்படுகின்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவாகி, எங்கிருக்கிறார் என்று தெரியாத ஒரு சூழ்நிலை.

எனவே, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்திலங்களிலும் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கொட்டகைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள்.

அப்போது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.

அப்படிப்பட்ட நேரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள், 'இந்தியாவே இன்றைக்கு நெருக்கடி நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நேரத்தில், நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குரல் எழுப்பியாக வேண்டும்' என செயல்பட்டார். அதனால்தான், நாம் மாநில சுயாட்சி வேண்டும் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கின்றோம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைகளில் முக்கியமானது.

கருணாநிதி, திமுக, கலைஞர், கலைஞர் கருணாநிதி,

தலைவர் கலைஞர் அவர்கள், ஐம்பெரும் முழக்கத்தினை நமக்காக உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.

* அண்ணா வழியில் அயராது உழைப்போம்.

* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.

* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.

* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.

* மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி

ஆகியவைதான் அந்த ஐந்து முழக்கங்கள்.

அந்த ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக இருக்கும் மாநில சுயாட்சிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் முடிவு செய்தார்கள்.

அப்படி முடிவுசெய்த நேரத்தில், அப்போது தமிழக தலைவர்களுள் முக்கியமான தலைவராக இருந்தவர், 9 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து, இந்திய நாட்டிற்கு பல பிரதமர்களை அடையாளம் காட்டிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். அவர் உடல்நலிவுற்ற நிலையில் தன்னுடைய இல்லத்தில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

காமராஜர், காமராஜ், kamarajar,

என்னதான் அரசியலில் நமக்கும் அவருக்கும் கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும், அவர் தமிழகத் தலைவர். எனவே, அப்படிப்பட்ட தலைவரை சந்தித்து ஆலோசனை கேட்போம் என்று முடிவு செய்து, தலைவர் கலைஞர் அவர்கள் நேராக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார். தலைவரை கண்டதும் எழுந்து உட்கார்ந்து, "என்ன?" என்று கேட்கின்றார்.

"இன்றைக்கு இந்தியாவை நெருக்கடி நிலை சூழ்ந்திருக்கின்றது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், நான் அதை எதிர்த்து குரல் கொடுக்கப் போகிறேன். அதற்கு உங்களுடைய அறிவுரை தேவை", என்று தலைவர் கலைஞர் அவர்கள் கேட்டபோது, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், "இந்தியாவில் எங்கும் சுதந்திர காற்று இல்லை, நீ இருக்கும் தமிழ்நாட்டில்தான் சுதந்திரக் காற்றை நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நீ எந்த காரணத்தைக் கொண்டும் ராஜிநாமா செய்துவிடக் கூடாது", என்ற அறிவுரையை தலைவர் கலைஞர் அவர்களுக்கு சொன்னார்கள்.

அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள், "ஆட்சி நமக்கு முக்கியமல்ல; பதவி நமக்கு முக்கியமல்ல; தீர்மானம் போடுவோம். என்ன விளைவுகள் வந்தாலும், நாம் கவலைப்படப் போவதில்லை என்ற பதிலை சொல்வதற்காகத்தான் வந்தேன்", என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு இல்லம் திரும்புகின்றார்.

இல்லம் திரும்பியவுடன், அம்மையார் இந்திரா காந்தி அவர்களின் இரண்டு தூதுவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னையில் தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து, மாடிக்குச் சென்று அவரை சந்தித்தார்கள். அப்படி வந்து சந்தித்து அவர்கள் சொன்னார்கள், "அம்மையார் இந்திரா காந்தி அவர்களின் தூதுவர்களாக வந்திருக்கின்றோம். நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டாம்; ஆனால் எதிர்க்கக்கூடாது. அப்படி நீங்கள் எதிர்த்தால் உங்கள் ஆட்சி அடுத்த விநாடி கவிழ்க்கப்படும். நீங்கள் எதிர்க்காமலும் ஆதரிக்காமலும் இருந்தால், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கலாம்", என்றொரு யோசனை சொன்னார்கள்.

அண்ணா, anna,

அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள், "நான் தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டவன். தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்பு எல்லாம் நாங்கள் அஞ்சிட மாட்டோம், ஆட்சி என்ன; எங்கள் உயிரே போனாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால், எங்கள் கொள்கையிலிருந்து நாங்கள் என்றைக்கும் பின்வாங்க மாட்டோம்", என்று சொல்லி நேராக கடற்கரைக்கு சென்றார்.

கடற்கரையில் திரண்டிருந்த கூட்டத்தில் பேசினார்; லட்சக்கணக்கான மக்களை எழுந்து நிற்க வைத்தார். அனைவரும் எழுந்து நின்றார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானத்தினை எடுத்துப் படித்தார். அப்படி படித்தபோது அவர் சொன்னார், "அம்மையார் இந்திரா காந்தி அவர்களே, உடனடியாக நெருக்கடி நிலையை நீங்கள் திரும்பப் பெற வேண்டும். சிறையில் இருக்கும் தலைவர்களையெல்லாம் நீங்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள்", என்று அந்தத் தீர்மானத்தினை படிக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் அத்தனைபேரும் அதனை வழிமொழிந்து, வரவேற்றார்கள். இது வரலாறு!

தீர்மானம் போட்ட அடுத்த விநாடி நம்முடைய ஆட்சியைக் கலைத்தார்கள்.

அப்படி ஆட்சியை கலைத்ததும், தயாநிதி மாறன் அவர்களின் தந்தை முரசொலி மாறன் அவர்கள், நம்முடைய கலாநிதி எம்.பி அவர்களின் தந்தை வீராசாமி அவர்கள், பேசிக் கொண்டிருக்கும் நான் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். அதன்பிறகு நடந்த வரலாறுகள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும்.

அதன்பின்னர், அதே அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் தி.மு.கழகத்தோடு கூட்டணி வைத்துக்கொண்டு, எங்கே தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் போட்டாரோ, அதே கடற்கரை மேடைக்கு வந்து பேசினார்.

இந்திரா காந்தி, indra gandhi,

"நான் நெருக்கடி நிலை கொண்டு வந்ததற்காக வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்; மன்னிப்பு கேட்கின்றேன்" என்று அவரை சொல்ல வைத்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

நான் எதற்காக இதனை சொல்கின்றேன் என்றால், ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் நாம் அந்த தீர்மானத்தை போட்டோம். இப்போது நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் எனக்கு இருக்கக்கூடிய மன சங்கடமெல்லாம் என்னவென்றால், ஆட்சியில் இருப்பவர்கள் செய்திருக்க வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அதனை எதிர்த்து தீர்மானம் போட்டிருக்க வேண்டும்.

நாம் கண்டிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனல், நாம் நேற்று டெல்லியில் என்ன போராட்டம் நடத்தினோம்?

அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டாம் என்றா போராட்டம் நடத்தினோம்? கிடையாது.

ஆனால், அதனை ரத்து செய்வதற்காக நீங்கள் அணுகிய முறை சரியில்லை. அதை அமல்படுத்திய விதம் சரியில்லை!

அதற்கு என்ன செய்திருக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் மக்களிடத்தில் கருத்துகளை கேட்டிருக்க வேண்டும். அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஒப்புதல் கேட்டிருக்க வேண்டும். அங்கு மக்கள் ஆட்சி அமைய வேண்டும். அப்படி அமைந்ததற்குப் பிறகு, அந்த ஆட்சி சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் டெல்லியில், மக்களவையில் மாநிலங்களவையில் வைத்து விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்து கேபினட்டில் அமர்ந்து நீங்கள் பேசி முடிவு செய்து, அதன்பிறகு முறையாக அதை அறிவிக்க வேண்டும்.

காஷ்மீர், kashmir,

இந்த முறை தான் நடைபெற்று இருக்கின்றதா?

இது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. சர்வாதிகாரத்தோடு நடந்திருக்கின்றது. எனவே, அதைதான் நாங்கள் சுட்டிக்காட்டி, ஏற்கனவே தீர்மானம் போட்டோம்.

இன்னும் கைதுசெய்து வீட்டுச் சிறையில் இருக்கும் தலைவர்கள், வீட்டுச் சிறையில்தான் இருக்கின்றார்களா? என்ன ஆனார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை.

இதைதான் நாங்கள் வலியுறுத்தி, அவர்களை விடுதலை செய்யுங்கள்; எங்கு இருக்கின்றார்கள் என்று சொல்லுங்கள்; மக்கள் காஷ்மீரில் சுதந்திரமாக நடமாட அனுமதியுங்கள் என்ற அடிப்படையில்தான் நேற்றைய தினம் டெல்லி மாநகரத்தில் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்திய கண்டன போராட்டம் நடைபெற்றது.

அதிலும்கூட எனக்கு இருக்கும் வருத்தம் என்னவென்றால், அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தொலைக்காட்சி, ஊடகங்கள் கூட முறையாக இந்த செய்தியை வெளியிடவில்லை.

ஏனென்றால், எமர்ஜென்சி!

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் ஊடகங்கள் இவற்றையெல்லாம் முழுமையாக வெளியிடுவீர்களா? வெளியிடப் போகிறார்களா? என்பது எனக்கு தெரியவில்லை; புரியவில்லை.

ஏனென்றால் உங்களுக்கும் மிரட்டல் இருக்கின்றது. எனவே, யாரும் வெளியிடுவதில்லை. எல்லாவற்றையும் மூடி மறைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். என்னதான் ஊடகங்கள் - பத்திரிகைகள் மூடி மறைத்தாலும், அதையும் தாண்டி மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள்.

என்ன நடக்கும் என்பதை நான் உங்களின் யோசனைக்ககே விட்டு விடுகின்றேன்.

இந்த நிலைதான் இன்றைக்கு நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது.

stalin, mk stalin, dmk stalin, ஸ்டாலின், முக ஸ்டாலின், திமுக,

எனவே, நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புவது, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை, இன்றைக்கு ஆட்சியில் இல்லை. இன்றைக்கு என்று சொல்வதை விட, கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. ஆனால், 8 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கின்றது.

ஆட்சி நடக்கின்றதா? நடக்கவில்லையா? என்பது வேறு!

ஆனால், ஆட்சியை நடத்துவதே இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.,தான். ஒவ்வொரு பிரச்சினையையும் இன்றைக்கு நாம் தான் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்த இலட்சணத்தில் முதலமைச்சர் விரைவில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். பிரதமர் மோடிதான் வெளிநாடு சென்று பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது இவர் துவங்கியிருக்கிறார்.

அவர் செல்லட்டும்; நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதனால் நாட்டிற்கு ஏதாவது நன்மை இருக்குமா?

முதலீடு திரட்டப் போவதாக சொல்கின்றார். நாட்டிற்கு முதலீடா? எடப்பாடிக்கு முதலீடா? என்பது தான் தெரியவில்லை!

ஏற்கனவே, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு வருகின்றது என்று சொன்னார்கள். என்வானது? ஏதாவது வந்ததா?

இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, edapadi palanisamy,

அதன்பிறகு, இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டைக் கொண்டு வரப் போவதாக இப்போது இருக்கும் முதலமைச்சர் அறிவித்தார்கள். வந்ததா என்றால், கிடையாது!

இப்போது முதலீட்டை திரட்ட போகின்றேன் என்று சொல்கிறார். அதனால்தான் சொல்கிறேன், மக்களுக்கு பயன்படும் வகையில், நாட்டிற்கு முதலீடு வந்தால் பரவாயில்லை. ஆனால், முதலமைச்சரோடு அமைச்சர்கள் புடைசூழ படையெடுத்துப் போகின்றார்கள். என்ன நடக்கப் போகின்றதோ!?

இந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி கொடுக்கப் போகின்றார்களோ!? என்ற நிலையில் தான் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றோம்.

இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கேற்ற வகையில் வரக்கூடிய காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுக்கு என்றைக்கும் பக்கபலமாக இருக்கும் என்ற உறுதியை - நம்பிக்கையை இந்த நேரத்தில் நான் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லி இருக்கும், 'வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய்' இருந்து உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். வாழுங்கள் வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk stalin report about edapadi foreign tour


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->