தலைவா முதல்ல பனையூர விட்டு வெளில வா தலைவா... விஜய்க்கு திமுக தரப்பில் சுட சுட பதிலடி!
DMK Saravanan reply to TVK Vijay
திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் விடுத்துள்ள அறிவுத் திருவிழா நடத்தினால் தவெகவிற்கு பற்றியெரிகிறதே? அது ஒரு சிறப்பான முன்னெடுப்பு என்பதற்கான அத்தாட்சியே இந்த வயிற்றெரிச்சல் பதிவு!
கரூர் கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களை நேரில் சென்று கூட ஆறுதல் சொல்ல வக்கற்றவர்கள், சமூக நீதி பற்றியெல்லாம் பேசலாமா? இறந்தவர்களெல்லாம் செல்வ சீமான்களா?
ஒடுக்கப்பட்டவர்கள், சமூகத்தின் கடை நிலையில் இருப்பவர்கள். அவர்களை இப்படி துச்சமாக மதித்த கட்சித் தலைவர் எந்த அடிப்படையில் இப்படியொரு அறிக்கையை விடுகிறார்?
சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியாகிவிட்டது.
மாநில அரசுகள் கணக்கெடுப்பை நடத்த முடியாது, பாஜக அரசு தான் அதனை நடத்த முடியும்.
கூட்டாளியிடம் எப்படி கேள்வி கேட்க முடியும் என்ற உங்களின் எண்ண ஓட்டம் புரிகிறது.
இன்று ஒரு முக்கிய செய்தி படித்திருக்க மாட்டீர்கள், தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் நாட்டில் இருந்து 155 பேர் UPSC Mains தேர்வில் தேர்ச்சி பெறரிருக்கின்றனர். அதில் 87 பேர் தமிழ் நாட்டின் அரசு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள். “நான் முதல்வன்” என ஒரு திட்டம் இருக்கிறது, இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நடத்திக் காட்டாத ஒரு அற்புதத் திட்டம்.
சமூக நீதியை ஓங்கி ஒலிக்கச் செய்யும் திட்டம்.
சமுக நீதி பற்றியெல்லாம் திமுகவிற்கு சுட்டிக் காட்டும் தகுதி யாருக்கும் இல்லை.
தலைவா முதல்ல பனையூர விட்டு வெளில வா தலைவா. மத்த கதையெல்லாம் அப்புறம் பேசலாம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Saravanan reply to TVK Vijay