உதயநிதியின் மொத்த குடும்ப பெண்களையும் கேலி செய்த மர்மநபர்கள்.! கொந்தளிப்பில் உடன்பிறப்புகள்.! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கூட அரசியல் வாசனை சற்று தூக்கலாகவே இருந்தது.

மேலும், தேசிய அரசியல் கட்சியின் தலைவர்கள் தமிழகம் வந்து பொங்கல் கொண்டாடி சென்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த பொங்கலை தங்களுக்கான பிரச்சாரமாக மாற்றி அமைத்துள்ளனர்.

இதற்கிடையே, திமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் உதயநிதி, செல்லும் இடமெல்லாம் வாய்க்கு வந்ததை பேசுவதால் தொடந்து சிக்கலில் சிக்கி வருகிறார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், சசிகலாவையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது.

இந்நிலையில், உதயநிதி மற்றும் அவரின் குடும்ப பெண்களை, உதயநிதி கூறிய வார்த்தைகளை வைத்தே சில மர்ம நபர்கள் விமர்சனம் செய்து சென்னையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

இந்த மர்ம நபர்களின் செயலுக்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை நேற்று சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். 

அவரின் அந்த மனுவில், "தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி மற்றும் அவருடைய குடும்ப பெண் உறுப்பினர்கள் பற்றி அவதூறாகவும், கேலியாகவும் சித்தரித்து பெண்களை அவமானப்படுத்தி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன், உதயநிதி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk report to chennai police commissioner


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->