தேர்தலை சந்திக்க அஞ்சுகிறதா திமுக! இன்று உச்சநீதிமன்றத்தில் திமுக போட்ட புதிய குண்டு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கும் நிலையில் தற்போது  நடைபெறும் அறிகுறிகள் தோன்றினாலும் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. 

உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக, வழக்‍கறிஞர் ஜெயசுகின் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 18) விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும் தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

அதாவது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும் டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

இன்றைய தினம் திமுக தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னமும் தொகுதி வரையறை செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஏற்கனவே இருந்த மற்றும் அதில் இருந்து பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் வார்டு வரையறைகள் இன்னும் முடியவில்லை என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk report against local body election in supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->