ஸ்டாலின் மீது கோபத்தில் இருந்த உடன்பிறப்புகளை, உசுப்பிவிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்! கடும் நெருக்கடியில் திமுக தலைமை!  - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்,  அந்த கட்சியினரிடையே போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை பெற தொடங்கிவிட்டனர். கடந்த 15ம் தேதி முதல், இரண்டு கட்சிகளும் விருப்பமனுக்களை பெற்று வரும் நிலையில், நேற்று மாலை திடீரென தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் இல்லாமல் மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் அதிமுக தரப்பில், விருப்ப மனுக்களை நாளை வரை அளிக்க கால நீட்டிப்பு அறிவித்துள்ளது. ஆரம்பம் முதலே, திமுக சார்பில் விருப்ப மனுக்கள் அளிக்க திமுகவினர் ஆர்வமாக முன்வராத நிலையில், முடிவடைய இருந்த விருப்பமனு பெரும் தேதியினை 27ஆம் தேதி வரை நீட்டித்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு, அவர்களின் விருப்ப மனு கட்டணம் திருப்பி தரப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இதனையடுத்து திமுகவினர் தங்களுக்கும் பணம் திருப்பி தரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இதில் கொடுமை என்னவென்றால் உள்ளாட்சி தேர்தலே நடைபெற முட்டுக்கட்டை போடும் விதமாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கில் வாதாடி வருவது தான் என்கிறார்கள் திமுகவினர். தேர்தலே நடக்க கூடாது என நினைக்கும் திமுக தலைமை, நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை, அதுவும் மற்ற கட்சிகளின் கட்டணத்தினை விட அதிக கட்டணம் வைத்து வசூலித்தது அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. 

இதில் கால நீட்டிப்பு வேற வைத்து விருப்ப மனுக்களை வாங்குகிறார்கள் என குமுறுகின்றனர் திமுகவினர். நிர்வாகிகளும் தலைமையின் பார்வையை பெறுவதற்காக விருப்ப மனுக்களை பணம் கட்டி வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஆனால் திமுக ஆட்சியில் இருந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் எங்களிடம் எவ்வளவு வசூல் செய்ய நினைக்கிறார்கள்.. அதிமுகவில் வழங்கப்பட்டது போல திமுக தலைமை வழங்காது எனவும், அதனை கட்சி நிதியில் சேர்த்து விடுவார்கள் எனவும் திமுகவினர் கொந்தளிக்கின்றனர்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk persons expect return the amount of local body election Optional petition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->