திமுக பிரமுகருக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு? அலேக்கா தூக்கிய காவல்துறை.!  - Seithipunal
Seithipunal


 சேலத்தில் பல  பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அப்படையில் திமுக பிரமுகரை, கியூ பிரிவு போலீசார் இழுத்து காருக்குள் போட்டு தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் என்பவர் அவரது உறவினரின் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அதிரடியாக பள்ளி வளாகத்தில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் திமுக செயலாளர் விஜயகுமாரை  தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். 

ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார், இதையடுத்து அந்த நான்கு பேரும் சேர்ந்து பலவந்தமாக இழுத்து காருக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு அவசரமாக விஜயகுமாரை கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து விஜயகுமார் கடத்தப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனிடையே, விஜயகுமார் இழுத்துச் செல்லும் சிசிடிவிக் காட்சிகள் தனியார் பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது, அந்த வீடியோ காட்சியில் அவரை இழுத்து செல்வது சேலம் கியு பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையிலான கவத்துறையினர் என தெரியவந்தது.

இதனையடுத்து, சேலம் அம்மாபேட்டை காவல் நிலையம் முன் திமுகவினர் திரண்டனர். இதையடுத்து விஜயகுமார் காவல்நிலையத்தில் இருந்து இரவு 11 மணியளவில் விஜயகுமார் விடுவிக்கப்பட்டார். 

சேலம், சேலம் கியூ பிரிவு காவல்துறை எதற்காக திமுக விஜயகுமாரை கைது செய்தது எதற்காக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அண்மையில் கேரளா மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் செல்போனில் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமாரின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், அவருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk party members arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->