16 வயது அதிகமான பெண்ணுடன் திமுக நிர்வாகி கள்ளக்காதல்.! நிர்வாகி மீது மென்மையான நடவடிக்கை எடுத்த திமுக.! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ஆம் ஆண்டு வாணியம்பாடியில் திமுக நகர செயலாளர் ஆன சாரதி குமாருக்கும், சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ரம்யா இளவரசன் என்பவருக்கும் திருமணம் ஆகியது. இந்த திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தான் நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையரிடம் ரம்யா தன்னுடைய கணவர் சாரதி குமார் அவரை விட 14 வயது மூத்த பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு வைத்திருப்பதாகவும், அவருடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்திருக்கிறார். 

மேலும், அந்த புகாரில் திருமணம் ஆனதிலிருந்து சாரதி குமார் அந்த பெண்ணுடன் தான் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். எங்கு சென்றாலும் அவரை தன்னுடன் அழைத்துச் செல்வார். மகப்பேறு காலத்தில் நான் தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்ற பொழுது எங்களுடைய வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். 

மேலும் என்னுடைய அக்கா மகளான 18 வயது பெண் ஒருவர்டனும் அவர் நெருக்கம் காட்டி வருகின்றார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் ஸ்டாலினிடம் புகார் அளித்தேன். அப்பொழுது சாரதி குமார் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். என்னுடைய பணம் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு எனக்கும் ,என்னுடைய குடும்பத்தாருக்கும், குழந்தைக்கும் சாரதிக்குமார் மிரட்டல் விடுக்கிறார் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மேற்கு மாவட்டம், வாணியம்பாடி நகரக் கழகப் பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்வதாக தெரிவித்ததன் காரணமாக, அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நகரக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு துரோகம் செய்த திமுக நகர செயலாளர் சாரதியை திமுகவை நீக்காமல், அவரே பதவி விலகிய பின்பு திமுக தலைமை அறிக்கை வெளியிட்டு மென்மையான நடவடிக்கை எடுத்திருப்பதாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk party member illegal relationship


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->