அதிமுக எடுத்த அதிரடி நடவடிக்கையால்; சென்னையில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் கீழையூர் வேளாங்கண்ணி பேருராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கிய நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் உள்பட பல நிலங்களை, கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் திரு.தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறப்படுகிறது. 

அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை அபகரித்துள்ளதாக நாகை நகர அதிமுக செயலாளர் திரு.தங்க கதிரவன், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த 18 தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், திமுக ஒன்றிய செயலாளர் திரு.தாமஸ் ஆல்வா எடிசன், திமுக மாவட்ட பொறுப்பாளர் திரு.கவுதமன் உள்ளிட்டோரிடம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நாகை ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் சென்னையில் கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு புகாரில் திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசனை நாகை நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்ததாக நாகை அதிமுக நகர செயலாளர் கதிரவன் அளித்ததை தொடர்ந்து திமுக நிர்வாகி தாமஸ் ஆல்வா எடிசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நாகையில் திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk party member arrested for land issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->