சற்றுமுன் தொடங்கிய திமுகவின் முக்கிய விழா!  - Seithipunal
Seithipunal


செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள். இந்த 3 விழாக்களையும் இணைத்து முப்பெரும் விழாவாக்க, மறந்த திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து, வருட வருடம், திமுகவால் கொண்டாட படுகிறது.

வழக்கமாக முப்பெரும் விழா, ஒரு மாநாடு போல நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக, ஊரடங்கு கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பு, தனிமனித இடைவெளியுடன் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது என முக ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன் திமுக முப்பெரும் விழா துவங்கி உள்ளது. புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை பேசி, ‘பெரியார் விருது',  ‘அண்ணா விருது', ‘கலைஞர் விருது' உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mupperum vizha start


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->