பாஜகவிடம் புறமுதுகிட்ட திமுக எம்பி.! டிவிட்டை டெலிட் செய்துவிட்டு ஜகா.!  - Seithipunal
Seithipunal


பாஜக பிரமுகரிடம் "முடிஞ்சா தொட்டு பார்" என்று சவால் விட்ட திமுக எம்.பி., செந்தில்குமார், சிறிது நேரத்தில் டிவிட்டை டெலிட் செய்துவிட்டு சமரசம் செய்துள்ளார்.

இலவச திட்டங்களால் நாட்டுக்கு நல்லதா? தீங்கா? என்ற விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், இதுசம்மந்தமான வழக்கு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இன்று திமுக வழக்கறிஞர் எம்பி வில்சனை பார்த்து, தலைமை நீதிபதி ரமணா "நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம்" என்று தெரிவிக்க, இதற்க்கு சமூகவலைத்தளங்களில் திமுக உடன்பிறப்புகள் பதில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அடிக்கடி வீரமாக பேசிவிட்டு, போட்ட டிவிட்டை டெலிட் செய்துவரும் திமுக எம்பி செந்தில் குமார், "ஆம், சமூகநீதி ஆட்சி மூலம் இதை சாதித்து, தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன சந்தேகம் அன்லார்ட்ஸ்" என்று நீதிபதியையே விமர்சிக்க, அந்த டிவிட்டை உடன்பிறப்புகள் ஆகா, ஓகோ என்று பகிர்ந்து வந்தனர்.

இதனை பார்த்த பாஜக நாராயண் திருப்பதி, "நீதிபதி குறித்து அவதூறாக கருத்து தெரிவிப்பது குற்றம். இவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு, "முடிஞ்சா தொட்டு பார்" என்று செந்திகுமார் சவால்விட்டுவிட்டு, பின்னர் என்ன நினைத்தாரோ, சவாலில் முடியாமல் அவரே டெலிட் செய்துவிட்டு சென்றுவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp senthilkumar challenge tweet delete


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->