ஆளுக்கு 5000 ரூபாய்., திமுகவின் பரப்புரையால் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நாமக்கல்‌ மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள்‌ அரச துறை, அரசு சின்னத்தைத் தவறாகப்‌ பயன்படுத்தி தேர்தல்‌ முறைகேட்டில்‌ ஈடுபடுவதாக, அதிமுக செய்தித்‌ தொடர்பாள‌ர் ‌பாபு முருகவேல்,‌ மாநிலத் தேர்தல் ஆணையருக்கு புகார்க் கடிதம் அனுப்பியுள்ளார். அவரின் அந்த புகார் கடித்ததில் தெரிவித்து இருப்பதாவது, 

"ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலில்‌ நாமக்கல்‌ மாவட்டம்‌, மாவட்ட ஊராட்சிக்‌ குழு 6-வது வார்டில்‌ நடைபெற இருக்கின்ற இடைத்‌தேர்தலின் போது, வாக்காளர்களின்‌ வாக்கைக் கவர்வதற்காக உண்மைக்குப்‌ புறம்பான செய்திகளை வாக்காளர்களிடம்‌ சொல்லி அரசுத் துறைகளைத் தவறாகப்‌ பயன்படுத்தி, நலவாரியத்தில்‌ உறுப்பினர்களாகச் சேர்ந்தால்‌ 5,000 ரூபாய்‌ தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து,

அரசு அலுவலர்களே நேரடியாக உங்கள்‌ இல்லங்களுக்கே வந்து உங்களை உறுப்பினர்களாக இணைத்து அதன்‌ பயனையும்‌, உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும்‌ என்று சொல்லி, தமிழக அரசு அறிவித்திருப்பதாக, அரசு சின்னத்தை திமுக தலைவர்களோடு அச்சிட்டு தவறான நோக்கத்தோடு ஒரு பொய்யான தகவலைச்‌ சொல்லி உள்ளனர்.

திமுக மாவட்டச்‌ செயலாளரும்‌, தற்போதைய மக்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமாரின்‌ உத்தரவின்‌ பேரில்‌ இந்த நடவடிக்கையை நாங்கள்‌ மேற்கொள்கிறோம்‌ என்று திமுக நிர்வாகிகள்‌ பொதுமக்களிடத்தில்‌ சொல்லி வாக்குகளைப்‌ பெற முயல்வதும்‌, பொய்யான தகவல்களை மக்களிடத்தில்‌ பரப்புவதையும்‌ உடனடியாகத்‌ தடுத்து நிறுத்தித்‌ தேர்தலை நியாயமான முறையில்‌ நடத்தி முடிக்க வேண்டும்‌ என்று அதிமுக சார்பில்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

புகார்‌க் கடிதத்தோடு இரண்டு காணொலிப்‌ பதிவுகளை இணைத்துள்ளேன்‌. அதனடிப்படையில்‌, அந்தக்‌ காணொலியில்‌ உள்ள நபர்களை உடனடியாகக்‌ கண்டறிந்து தேர்தலில்‌ முறைகேடு நடப்பதைத் தடுத்து நிறுத்தி உடனடியாக இச்செயலில்‌ ஈடுபட்டவர்களின்‌ மீது நடவடிக்கை எடுத்தும்‌, அரசின்‌ பெயரைத் தவறாகப்‌ பயன்படுத்தி, சட்டம்‌ - ஒழுங்கைச் சீர்குலைக்கும்‌ விதமாகச் செயல்படும்‌ நபர்களின்‌ மீதும்‌ இரு குழுவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும்‌ நபர்களின்‌ மீதும்‌ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறோம்‌''. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP FAKE ELECTION CAMPAIGN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->