திமுக அரசுக்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ.!  - Seithipunal
Seithipunal


ஆளும் தி மு க அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடையை எதிர்த்து, திமுக எம்எல்ஏ ஒருவரே போராட்டம் செய்தது பெரும் பரபரப்பையும், அரசியல் கேலிக்கூத்தாகவும் அமைந்துள்ளது.

திருப்பூர் : கல்லூரி சாலை கொங்கணகிரியில்  தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவில்கள் இருப்பதால் தினமும் நாள்தோறும் குடிமகன்கள் மது அருந்திவிட்டு, சாலையில் விழுந்து கிடப்பதும், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

எனவே இந்த கடையை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக அந்த பகுதியின் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து, போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜிடம் கடையை அகற்ற கோரி கடந்த சில நாட்களுக்கு முன் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.

இதனை அடுத்து நாளை (8.10.2021) அந்த கடையை அகற்றுவதற்காக திமுக எம்எல்ஏ செல்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டார். ஒருவழியாக டாஸ்மார்க் கடை மூடப்பட்டது என்றும், நாளையுடன் டாஸ்மாக் கடை மூடப்பட்டு விடும் என்று நிம்மதியடைந்த பொதுமக்களுக்கு, இன்று காலை பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த டாஸ்மாக் கடைக்கு புதிதாக மதுபான சரக்குகள்லாரியில் வந்து இறங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து திமுக எம்எல்ஏ செல்வராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திமுக எம்எல்ஏ செல்வராஜ், இந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என்று டாஸ்மார்க் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அப்போது டாஸ்மாக் அதிகாரிகள், இந்த மது பாட்டில்களை விற்பனை செய்த பின்னர் டாஸ்மாக் கடையை மூடி விடுவதாக தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக எம்எல்ஏ செல்வராஜ், உடனடியாக பொதுமக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டாஸ்மார்க் கடை அதிகாரிகள் மற்றும் போலீசார் திமுக எம்எல்ஏ மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla protest against tasmac shop in thirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->