தமிழக சட்டசபையில் களேபரம்! மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்! மன்னித்துவிட்ட ஓபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது நேற்று முதல் வருகின்ற 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. நேற்று நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதம் ஆனது இன்று சட்டசபையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ அன்பழகன், அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதற்கு பதிலளித்து அரசு தரப்பில் அமைச்சரும் முதலமைச்சரும் பேசி வந்த நிலையில், திமுக உறுப்பினர் எம்எல்ஏ அன்பழகன் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியை ஒருமையில் பேச அங்கே அமளி ஏற்பட்டது. 

அதனை அடுத்து திமுக உறுப்பினர் அன்பழகன் அவையில் இருந்து வெளியேற வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டுவந்தார். தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஜெ அன்பழகன் பேசியது தவறுதான் அதற்காக நான் வருத்தப்படுகிறேன் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுக்க, அதற்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேரறிஞர் அண்ணாவின் வழியில் மறப்போம் மன்னிப்போம் எனக்கூறி இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

மறப்போம் மன்னிப்போம் என்று கூறியதையடுத்து பன்னீர்செல்வம் தீர்மானத்தை திரும்பப் பெற்றார். இதனையடுத்து ஓபிஎஸ் அறிவித்த தீர்மானத்தினை சபாநாயகர் கைவிட்டார். மேலும் உறுப்பினர் ஜே அன்பழகனை சபாநாயகர் கடுமையாக கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Anbazhagan unrespectable speech in assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->