விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடக்க காரணம் ஆளுநர் புகார்.! பீதியை கிளப்பும் புதிய செய்தி.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதன் காரணம்,  தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் என்று, திமுக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கரூரில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களிலும், சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 

இதில், சென்னை எம் ஆர் விஜயபாஸ்கரின் சென்னையில் உள்ள வீட்டில் நடைபெற்ற சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் மொத்தமாக நடைபெற்றுள்ள இந்த சோதனையில், 25 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தெரிவிக்கையில், "தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, அதன் மூலம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமல், எதிர்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டும் மேற்கொண்டு வருகின்றது.

 

திமுக அரசு மீது குறுகிய காலத்திலேயே மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதனை திசை திருப்பவே இதுபோன்ற நாடகங்களை திமுக அரசு செய்து வருகிறது. காழ்ப்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது காவல்துறையை ஏவிவிட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் திமுக அரசுக்கு எங்களுடைய கடுமையான கண்டனம்." என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தமிழக ஆளுநரிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அதிமுக அமைச்சர்கள் மீது அளித்த ஊழல், முறைகேடு புகாரின் அடிப்படையிலேயே, அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீடு- அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை எம் ஆர் விஜயபாஸ்கரின் சென்னையில் உள்ள வீட்டில் நடைபெற்ற சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் சென்னை மற்றும் கரூரில் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister ragupathy say about raid issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->