பால்டாயில், எலி மருந்து தனி ஒருவருக்கு தர கூடாது - திமுக அமைச்சர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்கொலையை தடுப்பதற்காக சர்வதேச அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு ஆகியன இணைந்து 2003ஆம் ஆண்டில் இந்த தினத்தை பிரகடனம் செய்தது.

தற்கொலை செய்வதை தடுக்க அதை பற்றிய விழிப்புணர்வை பரப்புவதில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டால்தான் இந்த கொடிய நோயை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

இந்நிலையில், தற்கொலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், 

"தற்கொலை செய்துகொண்ட 15,000 பேர்களில் ஒரு பதினைந்து இருபது சதவீதம் மட்டுமே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மற்றவர்களெல்லாம் பால்டாயில், எலி மருந்து, சாணி பவுடர் இதை சாப்பிட்டு தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

சாணிக்கு பதிலாக சாணி பவுடர் தயாரிக்கிற அந்த நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மிக விரைவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்கொலைக்கு இன்னும் சில காரணிகளாக இருக்கக்கூடிய பால்டாயில், எலி மருந்து போன்றவற்றை கடைகளில் விற்பவர்கள் அதை ஒரு லாக்கரில் வைத்து பாதுகாப்பான இடங்களில் விற்பனை செய்ய வேண்டும். வெளிப்படையாய் தெரியும்படி விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தலையும்,

அதை வாங்க வருபவர்கள் தனி ஒருவராக வந்து வாங்கினால் தரக்கூடாது என்றும், இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து வந்து வாங்கினால் மட்டுமே எலி மருந்தை, பால்டாயில் தர வேண்டும் கேட்டால் மட்டுமே தரவேண்டும் என்று அறிவுறுத்த கூடிய அரசாணைகளை, துறையின் அலுவலர்கள் மூலம் அளிக்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அமைச்சர் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister ma subramaniyan say about suicide issue


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->