திமுக பிரமுகர் 'அட்டெம்ப்ட் மர்டர்' வழக்கில் ஆஜராகிய திமுக அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2011-ல் திமுகவினர் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டனர். அப்போது, திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், ஆறுமுகநேரி நகர திமுக செயலர் சுரேஷ் என்பவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 21, மே 29-ம் தேதிகளில் கொலை முயற்சி தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டு வீசுதல் போன்ற  சம்பவங்கள் நடந்தது.

இது தொடர்பாக கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் அனிதாகிருஷ்ணன்  உள்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி, இந்த வழக்கை வரும் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MInister in court For Murder Case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->