திமுக மேயர் கொலை வழக்கில் குற்றவாளி சிக்கினான்!! - Seithipunal
Seithipunal


நெல்லை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயராக இருந்த உமா மகேஸ்வரி, செவ்வாய்கிழமை பிற்பகலில் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் உள்ளிட்ட மூன்று பேரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். 

உயிரிழந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, பினாமி பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது இரு மகள்களின் பெயர்களில் பினாமி சொத்துக்களை மாற்ற உமா மகேஸ்வரி முயற்சி செய்ததாகவும், இந்த சூழலில் தான் கொலை நடந்திருப்பதாக போலீஸ் சந்தேகித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உமா மகேஸ்வரியுடன்  சொத்து தொடர்பாக, யார்? யார் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டவர்கள் என  3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

கொலை நடந்த இடத்தில சிசிடிவி காட்சியில் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமான ஸ்கார்பியோ கார் ஒன்று அந்த பகுதியில் நின்றது கண்டறியப்பட்டது. மேலும் ஒரு செல்போன் நம்பர் மட்டும் அந்த டவரில் அதிக நேரம் காணபட்டது.  கார் மற்றும் செல்போன் நம்பர் இரண்டும் ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தான் குற்றவாளி என ஒத்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk meyar murder case culprit arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->