பெண் கழிப்பறையையும் விட்டு வைக்காத திமுகவினர்.! கோவையில் அரங்கேறிய கூத்து.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆறாம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 92-ல் மட்டும் மறுவாக்குப்பதிவு, வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்கு எந்திரங்கள் 73 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த 73 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு மையங்களை கண்காணிக்க அரசியல் கட்சியினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் இரண்டு கண்டைனர் லாரிகள் வந்ததால், திமுகவினர் அதிர்ச்சிக்குள்ளாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்குள், பெண் போலீசாருக்கு இரண்டு கண்டனர் மூலம் நடமாடும் கழிப்பிடம் கொண்டுவரப்பட்டது.

இதனை பார்த்த திமுகவினர் தேர்தல் ஆணையம் ஏதோ சதி செய்கிறது என்ற நோக்கில், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நாங்கள் அந்த கண்டெய்னரில் உள்ள கழிவறைகளை பார்த்த பின்புதான் அனுமதி வழங்குவோம் என்றும் போர்க்கொடி தூக்கினர்.

இதனையடுத்து அடுத்து போலீசார், திமுகவினருக்கு அந்த கழிவுகளை சோதனை செய்வதற்கு அனுமதி வழங்கினர். திமுகவினர் அந்த கழிவறைகளை சோதனை செய்த பின்பு அமைதியாக அவர்களிடத்தில் கொண்டு அமர்ந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk members search in toilet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->