தஞ்சையில்., திமுகவினரிடம் சிக்கிய கண்டெய்னர் லாரி.! திறந்து பார்த்து வணக்கம் போட்ட பரிதாபம்.! பார்த்தால் - Seithipunal
Seithipunal


தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நின்ற கண்டெய்னரில், கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக கூறி, திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. குறிப்பாக 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள்.

இந்த நிலையில், தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஒரு கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. இதனை கண்ட திமுகவினர் உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அந்த  லாரி அரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும், அந்த லாரியில் இருந்த ஆவணங்களை வாங்கி சரிபார்த்தபோது, தமிழக அரசு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 4000 க்கும் மேற்பட்ட புத்தக பைகள் இருப்பது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இருந்தால் அந்த லாரியை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அந்நேரம் திமுகவினர் அனைத்து புத்தக பைகளையும் பிரித்துப் பார்த்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க முடியும்.

அந்த பைகளில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதாக நாங்கள் சந்தேகம் கொள்கிறோம் என்று போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

எவ்வளவோ சொல்லிப் பார்த்த காவல்துறையினர், ஒரு கட்டத்தில் கண்டெய்னர் லாரியை திறந்து, புத்தகக் பைகளை திறந்து காட்டினர். அந்த புத்தகப்பையில் கட்டுக்கட்டாக பணம் இல்லை வெறும் கற்று மட்டுமே இருந்ததை கண்ட திமுகவினர், போலீஸாருக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member complaint police in thanjai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->