ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் பதவி அம்பேல்? கலக்கத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


2017ம் ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் எம்.எல்.ஏ. ஷியாம் குமாரை தன் வசப்படுத்திக் கொண்ட பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதனால் எம்.எல்.ஏ. ஷியாம் குமார் பதவி பறிக்க வேண்டும் என காங்கிரஸ் புகார் அளிப்பது. 

ஆனால் இது சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் இதுபற்றி சபாநாயகரிடம் முறையிட வேண்டும் என்றும், அவர் நான்கு வாரத்தில் தன் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

மேலும் சபாநாயகரின் அதிகார வரம்பை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு தமிழகத்தில் முக்கிய உத்தரவாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். 

ஆனால் அவர்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது திமுக உச்சநீதிமன்றத்தை நாடியது. இப்போதைய மணிப்பூர் தீர்ப்பை சுட்டிக்காட்டி திமுக நீதி கேட்கிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பினரும் கலக்கத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk master plan for ops 11 mla case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->