முதல்வராகும் இலக்கை மாற்றிய ஸ்டாலின்! திமுகவின் மாஸ்டர் பிளானில் திடீர் மாற்றம்! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் ஆறு கட்டங்கள் முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சிகளும், மக்களும் அடுத்த பிரதமர் யார்? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என ஒரு எதிர்பார்ப்போடு தேர்தல் முடிவுகளை காத்துக்கிடக்கின்றனர்.

இப்படி இருக்கும் பட்சத்தில் மீண்டும் பாஜகவின் மோடி அல்லது காங்கிரசின் ராகுல் காந்தி இவர்களில் யார் வருவார்கள் என்பது தான் முதன்மை பேச்சாக இருந்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறான அரசியல் மாற்றங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் கட்சியானது, தங்களுக்கும் சரி, பாஜகாவிற்கும் சரி நிச்சயமாக பெரும்பான்மையோடு வெற்றி பெற மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்களாம். காங்கிரஸ் கட்சி தரப்பில் விசாரித்த போது, காங்கிரஸ் கட்சியானது 272 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி ஆட்சியை அமைக்க உரிமை கோர உள்ளதாக தெரிவிக்கிறார்கள். இல்லை என்றால் ராகுல் பிரதமராக சம்மதிக்கவில்லை என தெரிகிறது. 

பெரும்பான்மை என்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே காங்கிரஸ் கட்சியினர்  கணித்து வருகின்றனர். அதனால் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க கூடாது என்பதில் காங்கிரஸ் முழுமூச்சாக செயல்பட்டு கொண்டு வருகிறது. 

காங்கிரஸ், பாஜக இல்லாமல் மூன்றாவது அணி அமைந்தால், அதில் குழப்பத்தை ஏற்படுத்தி பதவி ஆசையை காட்டி குதிரை பேரம் நடத்தி பாஜகவே ஆட்சியை தக்கவைக்கும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு உருவாகி உள்ளதால்,  மூன்றாவது அணி அமையாமல் தடுக்க, மாநில கட்சிகளில் யார் அதிக பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறார்களோ அவர்களை பிரதமராக முன்மொழியலாம் என்ற கருத்துடன் மாநில கட்சிகளிடம் ரகசிய ஆதரவை திரட்டி வருகிறதாம் காங்கிரஸ் கட்சி.. 

ஆக காங்கிரஸ் கட்சி தங்கள் ஆட்சி இல்லை என்றாலும் பாஜக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் தான் திமுகவின் திட்டங்களிலும், செயல்களிலும் மாற்றங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது கடந்த வாரம் சந்திரசேகர் ராவை சந்திக்க மறுத்த திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது காங்கிரசின் திட்டத்தினை ஸ்டாலின் முன்னிருந்து பேசியுள்ளார். அதாவது காங்கிரஸ் ஆதரவுடன் மாநில கட்சிகளில் நாம் யாராவது பிரதமராக வாய்ப்பு உள்ளது என்று ஸ்டாலின் பேசியுள்ளார். அதற்கு சந்திரசேகர் ராவ் ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது. 

இதன் அடிப்படையில் தான்  கே.சி.ஆர் அடுத்து சந்திரபாபு நாயுடுவையும் திமுகவின் சார்பில் பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் பெரும்பான்மையாக வராத பட்சத்தில் காங்கிரஸின்  ஆதரவுடன், மூன்றாவது அணி அமைக்காமல் யார் அதிக இடங்களில் வருகிறார்களோ அவர்களை பிரதமராக முன்மொழியலாம், அமைச்சரவையில் பகிர்ந்துகொள்ளலாம் என்று அனைத்து மாநில கட்சிக்கும் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளதாம். 

இதனை மனதில் கொண்டு தமிழகத்தில், முழுமையாக 20 தொகுதியிலும் வெற்றி பெற்றால், கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ஆதரவுடன் பிரதமர் ஆகலாம் என திமுக திட்டமிட்டு வருகிறதாம். 

தேர்தல் முடிவுக்கு பின்னர் முதல்வர் ஆகிவிடுவோம் என நம்பிக்கொண்டு இருக்கும் ஸ்டாலினை நீங்கள் பிரதமரே ஆகலாம் என காங்கிரஸ் ஆசை காட்டியுள்ளது. முதல்வர் கனவு, பிரதமர் கனவு எல்லாம் நனவாகுமா அல்லது கனவே கானல் நீராகுமா? இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கும் என மே 23 தேதி தேர்தல் முடிவை பொறுத்தே தெரியும்.

English Summary

dmk leader plan will pm of india


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal