ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்.. ஆளுநரை பங்கம் செய்த திமுக ஐடி விங்...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். 

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சிக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் "இந்த நாட்டிலையே ஏன் வேர்ல்டுலையே அசம்பிளிய விட்டு ஓடிப்போன ஓடுகாலி கவர்னர் நம்ம ரம்மி ரெவி தான்" என பதிவிடப்பட்டுள்ளது. அதேபோன்று #GetOutRavi என்ற ஹேர் ஸ்டைல் ஆகும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. திமுக ஐடி விங்கின் இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK IT wing criticized TN Governor RN Ravi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->