திமுக நிர்வாகி அதிரடி நீக்கம்.! பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச பேச்சு.!! தலைமை அதிரடி.!! - Seithipunal
Seithipunal


திமுக நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகார் திமுக தலைமைக்கு செல்லவே, தற்போது அந்த நிர்வாகி மீது தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வெளியிட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, '' திமுக தகவல் தொழில்நுட்ப அணி பலமுறை வலியுறுத்தியும், அணியின் விதிமுறைகளையும் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் தகாத வார்த்தைகளை உபயோகித்து சமூக வலைதளங்களில் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்ட, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர், திரு. கதிரவன் தகவல் தொழில்நுட்ப அணியில் அணியின் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இனி வரும் காலங்களில் இது போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அணியினரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று திமுக தகவல் தொழில் நுட்ப அணி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary

dmk it wing administrator suspend


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal