திருமாவளவன், வைகோ தயவால் திமுகவிற்கு கிடைத்த அங்கீகாரம்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸூக்கு முதல் இரண்டு இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தபடியாக 3-வது இடத்தை தமிழகத்தின் திமுக பெற்றுள்ளது. கடந்தமுறை அதிமுக பெற்ற இந்த அங்கீகாரத்தை திமுக இந்தமுறை கைப்பற்றியுள்ளது. 

கடந்த முறை தனியாக நின்ற அதிமுக கன்னியாகுமரி, தருமபுரி தவிர மற்ற 37 இடங்களையும்  கைப்பற்றியது. இதன் மூலம் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மக்களவையில் அதிமுக 3-வது பெரிய கட்சியாக இடம்பிடித்தது.

இந்த முறை நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. தேனி தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. அதேசமயம் திமுக இந்தமுறை 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பட்ட கட்சியாக பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மாநில கட்சியான திமுக 23 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரியக் கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. 

மம்தா பானர்ஜியின் திரிணாமல் காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸூம் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சிகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் கடந்த தேர்தலைபோல அதிக இடங்களில் வென்ற 3-வது கட்சி என்ற பெருமை தமிழகத்துக்கே கிடைத்துள்ளது. 

கடந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. ஆனால் இந்த முறை திமுக வென்ற இடங்கள் 23 என்பது குறிப்பித்தக்கது. அந்த 23 ம் திமுக இடங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்த காரணத்தினாலே இந்த சிறப்பு கிடைத்துள்ளது. விசிக விழுப்புரம், மதிமுக ஈரோடு, கொமதேக நாமக்கல், ஐஜேகே பெரம்பலூர் ஆகிய நான்கு இடங்களும் கூட்டணி கட்சிகளின் இடங்களாகும். அவர்களின் தயவால் திமுகவிற்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. இதில் வைகோ முதலில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி பின்னர் திமுக சின்னத்தில் போட்டியிட சம்மதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk is 3rd largest party in Parliament


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->