திமுக உட்கட்சி தேர்தல்.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து, பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணமாக தலைமைக்கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இன்று முதல் வருகிற 25-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது. 

இன்று, கன்னியாகுமரி கிழக்கு-மேற்கு, தூத்துக்குடி வடக்கு-தெற்கு, திருநெல்வேலி கிழக்கு-மத்தி, தென்காசி வடக்கு-தெற்கு, விருதுநகர் வடக்கு-தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு-மேற்கு, தேனி வடக்கு-தெற்கு, மதுரை வடக்கு-தெற்கு-மாநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைக்கழகத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, நகரிய, பகுதி, மாநகரச் செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK internal party election Nomination starts from today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->