முக்குலோத்தோர், கொங்கு கவுண்டர், செட்டியார், நாடார்., வீட்டு பெண்களை திருமணம் செய்தால் 10 லட்சம் பரிசு.!  - Seithipunal
Seithipunal


வன்னியர், அகமுடையார், மறவர், கள்ளர், செட்டியார், நாடார், வெள்ளாளர், கொங்கு கவுண்டர், முதலியார், பிராமின், விஸ்வ கர்மா உள்ளிட்ட சாதிகளை அடக்கிய MBC, BC பிரிவுகளை சேர்ந்த பெண், ஆண்களை, பட்டியல் இனத்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் ரூ.60 ஆயிரம், ரூ.3 லட்சம், ரூ.10 லட்சம் பரிசும், தாலிக்கு ஒரு பவுன் தங்கமும் வழங்கப்படும் என்று, திமுக -காங்கிரஸ் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்க்கு பல்வேறு சாதி அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கடுமையான தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 259வது வாக்குறுதியாக, 'அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி' திமுக ஆட்சி அமைந்ததும் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்தும். அதன்படி, கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மன மக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை (சாதியினரை) மணந்து கொண்டால், வழங்கப்படும் நிதி உதவி 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். மற்றும் தாலிக்கு ஒரு பவுன் தங்க காசு வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், மூன்று லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட ஒரு படி மேலே சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில், 10 லட்சம் ரூபாய் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இது குறித்து தெரிவிக்கையில், 'திமுக முதலில் அவர்கள் கட்சியில் இணையும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்துவைத்து கொடுப்போம் என்று உறுதிமொழி கொடுக்கவேண்டும்.

பின்னர் இதுபோன்ற தேர்தல் அறிக்கைகளை அவர்கள் கொடுக்கலாம் அல்லது குறைந்தபட்சம் எம்எல்ஏ., எம்பி.,களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வீட்டு பெண்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமணம் செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அருந்ததியர் எழுச்சி பேரவை தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ள கருத்தில், 'நாம் வாழும் சமூகம் சாதியக் கட்டமைப்புக்குள் இருந்து வருகிறது. அனைவருமே ஏதேனும் ஒரு சாதியை சார்ந்த தான் இருக்கிறோம். இவர்கள் கொடுக்கும் 60000 ரூபாய்க்காகவும் ஒரு பவுன் தாலிக்கு ஆசைப்பட்டு மாற்று சாதி பெண்ணை ஒரு ஆதிதிராவிடர் திருமணம் செய்து கொண்டால், அதனை எப்படி பெண்வீட்டார் ஏற்றுக்கொள்வார்கள். ஜாதிகளை சட்டம் போட்டு ஒழிக்க முடியாது. இது ஆணவக் கொலைகளை அதிகப்படுத்தவே இந்த தேர்தல் அறிக்கை உதவும்' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல மூப்பனார் சமுதாய அமைப்பு, அனைத்து சமுதாய ஒற்றுமை இயக்கம், வெள்ளாளர் இயக்கம், பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், இந்த திமுக -காங்கிரஸ் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சாதி சண்டைகள், மத சண்டைகள் எதுவும் இல்லாத நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை சாதி சண்டைகளுக்கும், மத சண்டைகளுக்கும் வித்திடுவதாக சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவிலேயே ஒரு சாதியை விட்டு மற்றொரு சாதிக்கு பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள் என்ற நிலையில், இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை தூண்டும் விதமாக இதுபோன்ற ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருப்பது சமூகத்தில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டியலின மக்கள் முன்னேற வேண்டுமென்றால் திமுக ஆட்சியில் அறிவித்திருந்த நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்பதை நிறைவேற்றி இருந்தால், அவர்கள் இந்நேரம் முன்னேறி இருப்பார்கள். பொய்யான வாக்குறுதியை கொடுத்துவிட்டு திமுக இப்பொழுது அடுத்த வீட்டுப் பெண்களை அபகரிக்க திட்டம் தீட்டியதாக தெரிகிறது. ஏற்கனவே பொய்யான சாதி திருமணச் சான்றிதழ் கொடுத்து நாடக காதல், திருமணங்கள் அரங்கேறி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஃபார்வர்டு பிளாக் கட்சிகள் இதற்க்கு ஆதரவு தருவார்களா என்று கேட்டு சொல்லுங்கள்., இவ்வளவு ஏன்., விசிக.,காவின் கொடியை கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சுமந்து செல்லுமா என்று திமுக தலைவரை கேட்டு சொல்லுங்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையை முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு மாற்று சாதி பெண்களை தேடி தேடி காதல் வலைவீசி திருமணம் செய்தால், அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் முன்னேற்றமும் பாதிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk inc cpim manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->