போலி மதுபான தயாரித்த திமுக புள்ளி.! போட்டுக்கொடுத்த கூட்டாளியை போட்டு தள்ளிய குண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டை அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 35 வயதாகும் ஸ்டீபன் கடந்த 22ஆம் தேதி நள்ளிரவு தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்ததில் 6 பெரு கொண்ட ஒரு கும்பலை கைது செய்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாமியார் பட்டி மன்மதன், மருதீஸ்வரன், தேனியை சேர்ந்த மணிகண்ட ராஜன், உத்தமபாளையம் ராம்குமார்,அய்யங்கோட்டை சங்கரபாண்டி மற்றும் ஒரு 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில், மன்மதன் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கீழே குதித்து கால் முறிவு ஏற்பட்டது. 

இந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியது. இவர்கள் திமுக பிரமுகர் இன்பராஜ் என்பவருக்காக இந்த படுகொலையை செய்துள்ளனர்.

திமுக பிரமுகர் இன்பராஜ் சட்டவிரோதமாக போலி மது உற்பத்தி செய்து வந்துள்ளார். இன்பராஜ்-ன் கூட்டாளியாக செயல்பட்டுவந்த ஸ்டீபன், போலி மது விற்பனையின் போது முறைகேடு செய்துள்ளார். இதனால், இன்பராஜ் ஸ்டீபன்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. போலி மது விற்பனையில் இருந்து ஸ்டீபனை வெளியேற்றிய இன்பராஜ், தன்னுடைய ஆதரவாளர்களான மன்மதன், சக்திவேல் உள்ளிட்டோரை வைத்து போலி மது தயாரிப்பை ரகசியமாக நடத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி போலீசார் திமுக பிரமுகர் இன்பராஜ்-க்கு சொந்தமான தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பதினோராயிரம் போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இன்பராஜ் உள்ளிட்டோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, போலீசுக்கு தகவல் கொடுத்தது ஸ்டிபன் தான் என்று தெரிந்த இன்பராஜின் ஆதரவாளர்கள், ஸ்டீபனை மது அருந்த அழைத்து, சராமரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். மேலும் ஸ்டிபன் தலையை மட்டும் துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையத்தின் அருகே சாலையின் நடுப்பகுதியில் விட்டு சென்றுள்ளனர்.

இதை அனைத்தும் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகள் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் தலைமறைவாகி உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலி மதுபான தயாரிப்பு செய்துவந்த திமுக பிரமுகரை போலீசில் போட்டு கொடுத்தற்காக, திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் போட்டுத் தள்ளி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK INBARAJ arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->