திமுக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! திமுக தலைமை இரங்கல் கூட அறிவிக்காத துயரம்!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் மாரியய்யா மரணமடைந்தார். 

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மாரியய்யா. அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சையில் மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் மரணமடைந்தார். 

மாரியய்யா சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தெரிவு பெற்றதில்லை என்பது குறிபிடத்தக்கது. 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டையையில் வெற்றி பெற்ற பெரியண்ணன் மறைவிற்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு திமுக வின் சார்பாக வெற்றி பெற்றார். 

அவரது மறைவை அடுத்து அப்பகுதி திமுகவினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு திமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த விதமான இரங்கல் அறிவிப்பும் வரவில்லை என்பது திமுக தொண்டர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Former MLA Passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->