ஸ்டாலினின் உடன் பிறப்புகள் அரங்கேற்றிய அநியாயம்.! சட்டத்தை மிதித்து, எத்தனை உயிர்கள் போனாலும், எங்களுக்கு என்ன கவலை.!!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சாலை ஓரம் வைக்கப்படும் பேனர்களால், சாலை விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் இதுவரை பலியாகியுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூட ஒரு இளைஞர் சாலை ஓரம் வாய்ப்பட்ட பேனரில் தடுமாறி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி முதல் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் வரை பொதுக்கூட்டம், மாநாடு, கட்சிக்காரர்களின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சாலை ஓரங்களில் பேனர் வைத்து வருகின்றனர். 

இதற்கு முறையான அனுமதி வாங்குவதில்லை. அப்படி அனுமதி வாங்க சென்றால் இதற்கு அனுமதியும் கிடையாது. இப்படி விதி மீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கும், நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்து இருந்தனர்.

அனுமதி இன்றி திமுக வினர் ஓசூரில் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள்

அதில், ''விதி மீறல் பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அரசியல் கட்சிகளின் விதிமீறல் பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் உங்கள் அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியல் கட்சியில் சேர்ந்து விடுங்கள். இதுகுறித்து பலமுறை உத்தரவு பிறப்பித்தும் இது தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசும், அதிகாரிகளும் இதற்கான விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். மேலும், சாலை ஓரங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்க கூடாது என்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

அனுமதி இன்றி திமுக வினர் ஓசூரில் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள்

இதனிடையே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விதி மீறி பேனர் வைத்திருப்பதை பொது மக்கள் பார்க்க நேர்ந்தால், அது குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். இருப்பினும் சென்னையில் இன்றுவரை சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கும் பழக்கம் குறைந்தபாடு இல்லை.

அனுமதி இன்றி திமுக வினர் ஓசூரில் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள்

இந்நிலையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக, ஆளும் கட்சியை விட மிகவும் பொறுப்புடன் இருக்க கூடிய திமுகவினர், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அனுமதி இன்றி திமுக வினர் ஓசூரில் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்து உள்ளனர். 

அனுமதி இன்றி திமுக வினர் ஓசூரில் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள்

இது குறித்து சமூகவலைதளவாசிகள் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கும்,  போக்குவரத்துக்கும் இடையூராகவும்,  சாலையை சேதப்படுத்தும் திமுக வின் செயலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீதிமன்ற உத்தரவு என்று பின்பற்றுவதை காட்டிலும், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் இதனை திமுக பின்பற்றி இருக்க வேண்டும். தமிழகத்தை ஆளும் பொறுப்பை விட, ஆளும் கட்சியை கேள்வி கேட்கும் உரிமையை பெற்று கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி செலுத்தும் திமுகவின் விதம் எப்படி என்பதை, திமுகவின் தலைமை தான் விளக்கம் அளிக்க வேண்டும்.'' என்று பதிவிட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK FLEX BANNER


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->