திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கு மூன்று வருடம் சிறைதண்டனை! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தி.மு.க. எம்.எல்.ஏ.வாக கடந்த 1996 மற்றும் 2001 ஆண்டு தேர்தல்களில் வெற்றிபெற்று 2 முறை திருவாரூர் தொகுதி  இருந்தவர் எம்.எல்.ஏ.வாக அசோகன். அவர் 2006-ம் ஆண்டு  தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன்பிறகு சென்னை பட்டினப்பாக்கத்தில் 2-வது மனைவி ஹேமாவுடன் வசித்து வந்தார்.

2015-ம் ஆண்டு சென்னையை தாக்கிய பெருவெள்ளத்தின் போது, டிசம்பர் 6-ந்தேதி அசோகனின் மனைவி ஹேமா, கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பால், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணம் வழங்க சென்றார். நிவாரணம் வழங்கிவிட்டு வர இரவு 11 மணி ஆனதால் அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு சண்டையிட்டார். 

அப்போது ஹேமா அவரது தாயார் இருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கைத்துப்பாக்கியால் சுட்டு மிரட்டினார். அதிர்ச்சிக்குள்ளான ஹேமா தனது தாயாரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்த விவகாரம் குறித்து ஹேமா பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். 

இதன் காரணமாக அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஆனது, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்ரி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதிமுகவில் இருந்த அசோகன் மக்களவை தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில் மீண்டும் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK EX MLA sentenced to three years imprisonment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->