திமுக EX MLA க்கு கற்பழிப்பு வழக்கில் சிறை! தணடனை வாங்கி கொடுக்க போராடிய கட்சி எது தெரியுமா?! மனதை பதற வைக்கும் முழு விவரம்!  - Seithipunal
Seithipunal


குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து முதல் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றமானது செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை பல வழக்குகள் நடைபெற்று வந்தாலும் முதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெரம்பலூர் முன்னால் எம்எல்ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்திற்கு காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  இதன் பின்னணியை பார்க்கும் போது மனது பதறவைக்கிறது. 

இந்த சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு  ஜூலை 13- ஆம் தேதி கேரளாவிலிருந்து வீட்டு வேலைக்கு என்று கூறி அழைத்து வரப்பட்ட பள்ளிச் சிறுமியை தான் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி கொலை செய்து உள்ளனர். 

இந்த கொலையில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூரில் முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் தன் வீட்டு வேலைக்கு ஆள் தேவை என்று தனது நண்பரான அன்பரசு என்பவரிடம் கூறியுள்ளார். 

அதற்காக அன்பரசு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் (49) என்பவரின் 15 வயது மகள் சத்யா என்ற சிறுமியை தன் சொந்தச் செலவில் படிக்க வைப்பதாகக் கூறி  அழைத்து வந்து  ஜூன் 23 அன்று பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் வீட்டில் விட்டுள்ளனர். 

ஆனால் ஜூன் 25ம் தேதி சத்யா தனது அம்மா சுசீலாவிற்கு போன் செய்து, இங்கு இருக்கப் பிடிக்கவில்லை தன்னை அழைத்துச் சென்றுவிடுங்கள் என கூறியுள்ளார். இதனால் சத்யாவை அழைத்து செல்ல ஜூன் 29ம் தேதி சத்யாவின் அப்பா அம்மா சந்திரனும் சுசீலாவும் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கும் போதே, சத்யாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறியிருக்கிறார். 

பெற்றோர் வந்து மருத்துவமனையில் பார்க்கும் போது சுயநினைவில்லாமல் இருந்த சத்யாவை தான் பார்த்துள்ளனர். பிறகு ஜூன் 30ம் தேதி முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், நண்பர் ஜெய்சங்கர் மற்றும் சத்யாவின் பெற்றோர் உயர்சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லாத நிலையில், சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் சத்யாவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், ஜூலை 6ம் தேதி சத்யா உயிரிழந்தார். அப்போதே பிரேத பரிசோதனை முடிந்து  அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சத்யா அம்மாவிடம் பேசிய அன்றே  ராஜ்குமார் உள்ளிட்ட நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மயக்கமடைந்த நிலையில் இருந்த சத்யாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பல மருத்துவமனைகள் சிகிச்சைக்கு பிறகு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விஷம் அருந்தியதாக  கூறி சத்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பெரம்பலூர் போலீசார் இது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்ததுடன்  தங்கள் பணியை நிறைவு செய்துள்ளார்கள். இந்நிலையில் தான் கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீர்மேடு பகுதி செயலாளர் ஆர்.திலகன், பகுதி  குழு உறுப்பினர்கள் பி.ஏ.ஜேக்கப், சந்தோஸ் கே.ராஜன், உள்ளூர் செயலாளர் சுகு ஆகியோர் இந்த பிரச்சனையை கையிலெடுத்தனர். 

சிறுமி சத்யாவின் உடலில் பாலியல் கொடுமை செய்ததற்கான காயங்கள் இருப்பதை உறுதி செய்த அவர்கள் பீர்மேடு கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பிஜூமோளிடம் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் வேகமாக செயல்பட்ட சிபிஎம் தலைவர்களும், எம்எல்ஏவும் சத்யாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தியதன் அடிப்படையில் காவல் துறையினர் மறுபிரேதப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கினர். 

கோட்டயம் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் மீண்டும் பிரேத பரிசோதனை நடந்த போது சத்யாவின் உடலில் சுமார் 13 காயங்கள் இருந்ததும், மிருகத்தனமாக சத்யாவை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதன் பிறகே வழக்கு சூடுபிடித்து இன்று தண்டனை கிடைத்துள்ளது. 

சிறுமி சத்யா பெரம்பலூர், திருச்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை எந்த  மருத்துவமனை மருத்துவர்களும் தெரிவிக்கவில்லை என்பது தான் வேதனையான விஷயம். மேலும் தமிழக காவல்துறையும் சரியான முறையில் விசாரிக்காதது காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ex mla culprit in maid rape and murder case proven by cpm


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->