கடைசி நேரத்தில் பாமகவிற்கு இன்ப அதிர்ச்சி! திமுகவிற்கு பேரதிர்ச்சி! திமுக முன்னாள் அமைச்சர்  அன்புமணிக்கு ஆதரவு!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் முல்லைவேந்தன்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது தர்மபுரி தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பாமகவின் அன்புமணி வெற்றி பெற்றதால் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி திமுகவை சேர்ந்த இன்பசேகரன், பழனிமாணிக்கம், முல்லைவேந்தன் மூவரையும் சஸ்பெண்ட் செய்து திமுகவின் தலைமை உத்தரவிட்டது. 

பின்னர்  இன்பசேகரன், பழனிமாணிக்கம் கட்சியில் இணைக்கப்பட்டிருந்தனர். முல்லைவேந்தன் பின்னர் தேமுதிகவில் இணைந்தாலும் அதிகம் நாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் மீண்டும் திமுகவில் இணைந்து, திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாமகவின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், திமுக வின் சார்பாக புதிய முகமாக மருத்துவர் செந்தில் குமார்  போட்டியிடுகிறர்கள். 

இந்நிலையில் ஏற்கனவே அங்கே திமுக வேட்பாளருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இன்னும்  பின்னடைவாகக் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவளிப்பதாக திமுகவிற்கு  அதிர்ச்சி அளித்துள்ளார். இது பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியாகவும் திமுகவினருக்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ex minister mullaiventhan support pmk anbumani


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->