திமுக முன்னாள் அமைச்சர் முதல்வருடன் திடீர் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று காலை சென்னையில் முதலமைச்சர் வீட்டிற்கு உயர்கல்விதுறைத் அமைச்சர் அன்பழகனும், திமுக முன்னாள் அமைச்சருமான முல்லைவேந்தனும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த, சந்திப்பில் தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வாழ்வதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பசு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளைக் கூட காப்பாற்ற முடியாத சூழல், குடிநீர் உட்பட வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தத்தளிக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீழ்க்கண்ட நீர் மேலாண்மைத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் இந்த நிதி ஆண்டிலேயே நிறைவேற்றித்தர வேண்டும்.


 

ஈச்சம்பாடி அணையிலிருந்து நீரேற்றும் திட்டத்தின் மூலமாக 66 ஏரிகளுக்கு நீர் பாசன வசதிகளை செய்து தரவேண்டும். அதேபோல வாணியாறு அணை இடதுபுறக் கால்வாயை இராமியம்பட்டி கோபிசெட்டிபாளையம் மற்றும் மூக்கனூர்  வரை நீட்டிப்புச் செய்து அந்த பகுதியில் உள்ள 18 ஏரிகளுக்கு நீர் வழங்கிட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்து மக்களையும், விவசாயிகளையும் வறட்சியின் பிடியிலிருந்து நிரந்தரமாக காப்பாற்றிட ஒகேனக்கல் காவேரி உபரி நீரை நீரேற்றும் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் கேட்டுக்கொண்டு, விரிவான மனுவினையும் அளித்தேன் என முல்லை வேந்தன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk ex minister mullaiventhan meet with cm palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->