முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடப்போகும் திமுக வேட்பாளர்.. தனி கவனம் செலுத்தும் திமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர்களின் நேர்காணல் என பிஸியாக இருந்து வருகிறார். 

இதனிடையே திமுக கூட்டணியில் மூன்று கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. காணொலி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் கடந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வரும் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட அதிகளவில் வாய்ப்புள்ளது. அவருக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளரை தேர்வு செய்வதில் திமுக தற்போது தனி கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk edappadi constituency candidate


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->