திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. பதற்றத்தின் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவராக உள்ளார். அவரது தலைமையிலான குழு திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியது. பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டங்களை முடித்துக்கொண்டு துரைமுருகன் சென்னை வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், மயக்கம் ஏற்பட்டதாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டார். 

சென்னை வந்தவுடன் அவர் வழக்கமாக சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு வரும் போரூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை நிறைவு செய்தபின் அவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஸ்டாலின், துரைமுருகன் என அடுத்தடுத்து உடல்நிலை குறைவு ஏற்படுவதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk duraimurugan returns to home


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->