மீண்டும் கருப்பு : போராட்டத்தை அறிவித்த துரைமுருகன்.!  - Seithipunal
Seithipunal


மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து 20-09-2021 அன்று தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அவரவர் இல்லங்களின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், திமுக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிறுத்தியுள்ளார்.

மேலும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட நாடு தழுவிய பிரச்சினைகளை கண்டித்து கண்டன போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த போராட்டம் குறித்து வெளியான அந்த அறிவிப்பில், "மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து 20-09-2021 அன்று தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டனப் போராட்டம் குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அம்மையார் அவர்கள் தலைமையில் 20.08.2021 நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், “மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக் கேட்பு” உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-09-2021 (திங்கட் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதசார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் விவரம் : 

மு.க. ஸ்டாலின், தி.மு.க. 
கி.வீரமணி, திராவிடர் கழகம்
கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 
வைகோ, ம.தி.மு.க. 
கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 
ஆர். முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 
கே.எம்.காதர்மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 
திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி 
எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி 
ஈ.ஆர். ஈஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 
வேல்முருகன் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk duraimurugan announce protest sep 20


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->