பாமகவிற்கு வாக்கு கேட்ட திமுக வேட்பாளர்! அதிர்ச்சியில் திமுக தலைவர்கள்!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் டாக்டர் செந்தில்குமார் அவர்களின் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆனது அந்த கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் தர்மபுரியில் நடைபெற்றது. 

அப்போது அங்கு பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தருமபுரி மாவட்டத்திற்கு அதிகமாக செய்துள்ளதாக ஒரு பட்டியலை வாசித்தார். அந்த பட்டியலை வாசித்த போது அங்கிருந்த திமுக உறுப்பினர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் ஏற்கனவே திமுக கொண்டு வந்ததாகக் கூறப்படும் பல திட்டங்கள் பாமக கொண்டு வந்த திட்டங்கள் என விரிவாகவே நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது அதை மீண்டும் கூறியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். 

தருமபுரி மருத்துவக் கல்லூரி பாமக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருக்கும் பொழுது அனுமதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதனை திமுக திட்டமாகவும் அதேபோல மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது ரயில்வே திட்டங்கள் பல கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்பொழுது ரயில்வே துறை அமைச்சராக இருந்தது  பாட்டாளி மக்கள் கட்சி என்பதையும் திமுகவினர் மீண்டும் மீண்டும் மறந்து பாமக  திட்டங்களை கூறி வாக்குகளை கேட்டது அவர்களுக்கே ஆச்சர்யம் அளித்தது. 

அதனைத் தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்ட மொரப்பூர் தருமபுரி ரயில்வே திட்டத்தினையும் திமுக கொண்டு வந்ததாக கூற, திமுகவினருக்கே சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் நெளிய ஆரம்பித்துவிட்டர்களாம்.  18 முறை தலைவர்களை சந்தித்து தான் கொண்டு வந்ததாக அன்புமணி தெளிவாக கூறிவிட்ட  நிலையில், திமுக கொண்டு வந்தது என்று கூறியதும் அங்கிருந்தவர்களுக்கு முகம் மாறியது. 

தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் அன்புமணி போட்டியிடும் தருமபுரி தொகுதியில் தான் என்ன செய்து உள்ளேன் என்பதையும், அவரை கவனிக்கும் அனைவருக்கும் தெரியும் அளவில் விளம்பர படுத்திவிட்டதால், திமுக அங்கே தான் செய்ததாக கூறுவதை திமுகவினரே ஏற்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இவர்கள் சாதனைகளாக இதனையே பேசினால் அன்புமணி தான் வெற்றி பெறுவார் ஏனெனில் இது அன்புமணியின் திட்டம் என்று அனைவருக்குமே தெரியுமே என திமுகவினர் புலம்பி வருகின்றனர். 

மேலும் வேட்பாளராக அறிமுகக் கூட்டத்தில் பேசிய டாக்டர் செந்தில்குமார் முதல் வரியிலேயே திமுகவின் கொள்கையை விற்றுவிட்டார். சாதி மறுப்பு இயக்கமான திமுக வில் அவர் பேசிய முதல் வார்த்தையை நான் வடிவேல் கவுண்டரின் பேரன் செல்வராஜ் கவுண்டரின் மகன் என தனது சாதி பெயரை முன்னிலைப்படுத்தியது தான்..  மேலும் நான் உங்களின் ரத்த சொந்தம் உங்கள் வீட்டுப்பிள்ளை என்றவாறு கூறி அவர் வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார். இது அங்கு குழுமியிருந்த விசிக கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தது. 

மேலும் தொடர்ச்சியாக அவர் அன்புமணியை மையமாக வைத்துப் பேசி அதிகமாக புலம்பியுள்ளார். அவர் பேசும்போது பாமக பாஜக அதிமுக தேமுதிக என்ற வலுவான கூட்டணியை திமுக காங்கிரஸ் விசிக கூட்டணி அவ்வளவு எளிதாக வென்று விட முடியாது எனவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர்கள் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார் எனவும் அவர் பேசியது அங்கிருந்த திமுக தலைவர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது. 

ஏற்கனவே வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போட்ட டாக்டர் செந்தில்குமார் தற்போது இவ்வாறு பேசியிருப்பது திமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் தேர்தல் வரை தாக்குப்பிடிக்க  வாய்ப்பு உள்ளதா என்றும் சந்தேகமும் அவர்களுக்கு நிலவியுள்ளது.  தர்மபுரி தொகுதியில் எதனை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என தெரியாமல் திமுகவினர் விழிபிதுங்கி பாமகவின் சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk dharmapuri candidate intro speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->