மஜா.,பா, மஜா.,பா, திமுக கூட்டணி கட்சி ஒரு வழியாக வழிக்கு வந்தது.! நாளை ஒப்பந்தம்.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடித்துள்ளது.

தற்போது திமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு மட்டுமே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் ஒப்பந்தம் ஆகாமல் இழுபறியில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளையும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா ஆறு தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளையும் ஒதுக்கி திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்நிலையில், திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளை கேட்டு இருந்தது. ஆனால் திமுக தரப்பில் 6 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று தெரிவித்திருந்தது. 

இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளிலும் திமுக 6 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட தர முடியாது என்ற தன் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகளை ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், நாளை திமுக - மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CPIM ALLIANCE MARCH 7 EVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->